நமது பூண்டி மாதா பசிலிக்காவில் திருநீற்றுப் புதன் திருப்பலியோடு தவக்காலம் இனிதே துவங்கப்பட்டது. அதிபர், பங்குத் தந்தை, உதவி அதிபர், மற்றும் ஏனைய அருட்தந்தையர்கள் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினார்கள். ஏராளமான இறைமக்கள் திருவழிபாட்டில் கலந்து கொண்டு நெற்றியில் சாம்பல் பூசி, காவி உடை, செபமாலை அணிந்து தவக்காலத்தை துவங்கினார்கள்.