இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள் (All Souls’ Day)
பூண்டி அன்னையின் அன்புப் பிள்ளைகளே! இன்று (02-11-2023) பூண்டி மாதா பசிலிக்காவில் இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவை முன்னிட்டு இறையடியார் லூர்து சேவியர், இராயப்பர் அடிகளார் மற்றும் பொதுமக்களினுடைய கல்லறைகள் முன்பு செபம் செய்யப்பட்டு புனிதப்படுத்தப்பட்டது. திரளான பங்கு மக்கள் பங்கேற்று தங்களுடைய மரணித்த உறவுகளுக்காக இறைவனின் இரக்கத்தை வேண்டினார்கள். மரியே வாழ்க