easter poondi madha basilica

உயிர்ப்பு பெருவிழா Happy Easter

நமது பூண்டி மாதா திருத்தலப் பேராலயத்தில் ஆண்டவரின் பாஸ்காத் திருவிழிப்புஉயிர்ப்பு பெருவிழா திருப்பலி, ஒளி வழிபாடு, இறைவார்த்தை வழிபாடு, திருமுழுக்கு வழிபாடு, ஆகிய நிகழ்வுகள் வெகு விமர்சையாக, ஏராளமான நம்பிக்கையாளர்கள் கலந்து கொள்ள மிகச் சிறப்பாக நடைபெற்றது. பூண்டி மாதா பசிலிக்காவின் அதிபர், உதவி-அதிபர், அருள்தந்தையர்கள், அருள்கன்னியர்கள் மற்றும் இறைமக்கள் சார்பாக உங்கள் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். Dear Beloved Children of...

Continue reading

poondi madha

புனித வெள்ளி

நமது பூண்டி மாதா திருத்தலப் பேராலயத்தில் புனித வெள்ளி (இயேசுவின் திருப் பாடுகள்) திருச்சிலுவைப்பாதை, இறைவார்த்தை வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திரு விருந்து, ஆகிய நிகழ்வுகளில் ஏராளமான அன்னையின் பக்தர்கள் கலந்து கொண்டனர். மரியே வாழ்க

Continue reading

poondi madha

புனித வியாழன்

நமது பூண்டி மாதா திருத்தலப் பேராலயத்தில் புனித வியாழன் (ஆண்டவரின் இராவுணவு) திருவழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றது. அதில், இறைவார்த்தை வழிபாடு, பாதம் கழுவும் சடங்கு, நற்கருணை இடமாற்றப் பவனி, நள்ளிரவு 12 மணி வரை நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது. திரளான அன்னையின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Continue reading

palm sunday

குருத்து ஞாயிறு

நமது பூண்டி மாதா திருத்தலப் பேராலயத்தில், இயேசு ஆண்டவருடைய பாடுகளின் ஞாயிறு (குருத்து ஞாயிறு) குருத்தோலை பவனியும், ஆடம்பர கூட்டுப் பாடல் திருப்பலியும் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான இறை மக்கள், அன்னையின் அன்பு பக்தர்கள் கலந்து கொண்டு இறையாசிர் பெற்றுச் சென்றனர்.

Continue reading