poondi madha

இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள் (All Souls’ Day)

பூண்டி அன்னையின் அன்புப் பிள்ளைகளே! இன்று (02-11-2023) பூண்டி மாதா பசிலிக்காவில் இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவை முன்னிட்டு இறையடியார் லூர்து சேவியர், இராயப்பர் அடிகளார் மற்றும் பொதுமக்களினுடைய கல்லறைகள் முன்பு செபம் செய்யப்பட்டு புனிதப்படுத்தப்பட்டது. திரளான பங்கு மக்கள் பங்கேற்று தங்களுடைய மரணித்த உறவுகளுக்காக இறைவனின் இரக்கத்தை வேண்டினார்கள். மரியே வாழ்க

Continue reading

poondi madha

அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா

பூண்டி மாதா திருத்தலப் பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழாவானது குடந்தை ஆயர் மேதகு F.அந்தோனிசாமி அவர்களால் கொடியேற்றப்பட்டு, கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. ஏராளமான இறைமக்கள் கலந்துகொண்டு அன்னையின் ஆசி பெற்று சென்றனர். மரியே வாழ்க! At Poondi Madha Basilica, the Solemnity of the Nativity of Mother Mary was inaugurated by Most Rev. F. Antonisamy Bishop of Kumbakonam, who hoisted...

Continue reading

independance-day-poondi-madha-basilic

77 வது சுதந்திர தின நாள்

இன்று 77 வது சுதந்திர தின நாள் நம் பூண்டி மாதா பேராலயத்தில் கொண்டாடப்பட்டது. நம் பேராலயத்தின் அதிபர் & பங்குத்தந்தை. பேரருள் பணி. சாம்சன் தேசியக்கொடியேற்றினார். அன்னை மரியாளின் விண்ணேற்பு பெருவிழா திருப்பலியில் ஏராளமான இறைமக்கள் பங்கு பெற்று இறையாசீர் பெற்றனர்.

Continue reading

poondi madha

புதிய ஆராதனை ஆலயம் மற்றும் திருப்பலி திருப்பீடப் பொருட்கள் வைக்கும் அறை மற்றும் தியான பீடம் கட்டிடப் பணி

பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதாவின் அன்புப் பிள்ளைகளே!நமது நீண்ட கால வேண்டுகோளுக்கு ஏற்ப, புதிய ஆராதனை ஆலயம் மற்றும் திருப்பலி திருப்பீடப் பொருட்கள் வைக்கும் அறை மற்றும் தியான பீடம் கட்டிடப் பணியானது இனிதே தொடங்கப்பட்டுள்ளது; என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தங்களது இடைவிடாத ஜெபத்தையும் உடனிருப்பையும் தாராளமனதுடன் அளித்திட கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம். மரியே வாழ்க! Dear Beloved Children of Miraculous Mother of Poondi!A much...

Continue reading

செபமாலை மாதம்

செபமாலை மாதத்தை நிறைவு செய்யும் வகையில் இன்றைய நாளில் சிறப்பு செபமாலையும், திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. இந்த மாதம் முழுவதும் செபமாலையில் பங்கேற்ற 18 குழந்தைகளுக்கு பேராலய அதிபர் பேரருட்திரு. சாம்சன் அடிகளார் பரிசு வழங்கினார்கள். இந்த மாதம் முழுவதும் செபமாலையினை ஒருங்கிணைத்த மரியாயின் சேனையினருக்கும், அருள்சகோதரிகள் மற்றும் பங்கு மக்களுக்கு எமது நன்றிகளும், செபங்களும். மரியே வாழ்க!

Continue reading

Sinna Rani Elementary School

On behalf of Poondi Madha Religious Trust thirty deserving children from Sinna Rani Elementary School

பூண்டி மாதா அறக்கட்டளை சார்பில் 30 மாணவ மாணவியருக்கு சீருடை, பள்ளிப் பை மற்றும் எழுதுகோல்கள் வழங்கப்பட்டன. இதற்கு உதவிட்ட திருச்சியை சார்ந்த திரு. ஆன்டனி சிந்தாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எமது நன்றிகளும், செபங்களும். நமது பேராலய அதிபர் பேரருட்திரு. சாம்சன் அடிகளார், உதவி அதிபர் அருள்பணி. ரூபன் அடிகளார் மற்றும் பேராலய தந்தையர்களும், சின்ன ராணி தொடக்கப் பள்ளி அருள்சகோதரிகளும் உடனிருந்து குழந்தைகளை ஊக்குவித்தனர். On behalf...

Continue reading

poondi madha

பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா தேர்பவனி

பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழாவை முன்னிட்டு தேர்பவனி மிக சிறப்பாக நடை பெற்றது.

Continue reading