Holy Thursday at Poondi Madha Basilica

இரவு ஆராதனை
Night Worship at poondi Madha Basilica

குருத்து ஞாயிறு நிகழ்வு
Clergy Sunday at Poondi Madha Basilica

6ஆம் வெள்ளி
6ஆம் வெள்ளி பரி பூரண பலன் திருப்பலி

பூண்டி புதுமை மாதா இரவு
பூண்டி புதுமை மாதா இரவு வழிபாட்டை வழிநடத்திவர் அருட்தந்தை நிர்மல் ராஜ், வேலூர் மறைமாவட்டத்தை சார்ந்தவர்.

பூண்டி புதுமை மாதா இரவு
பூண்டி புதுமை மாதா இரவு வழிபாட்டை வழிநடத்தியவர் அருட்தந்தை அமுல் வில்லியம், தஞ்சை மறைமாவட்டம். அன்னையின் பக்தர்கள் கலந்துகொண்டு செபித்து ஆசீர்ப்பெற்றனர்

இறுதி நாள் தேர்பவனி
பூண்டி மாதா திருவிழாவின் இறுதி நாள் கொடியேற்றமும், திருவிழா திருப்பலியும் ,அன்னையின் தேர்பவனியும்.. பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா மரியன்னையின் அக்கறை காட்டும் கரங்கள் என்ற சிந்தனையுடன் குடந்தை மறைமாவட்ட மேதகு ஆயர் F.அந்தோனிசாமி D.D.,S.T.L.,அவர்களால் சிறப்பு கூட்டுபாடற் திருப்பலி நிறைவேற்றப்பட்டது …ஏராளமான திருப்பயணிகளும்,பங்கு மக்களும் திருப்பலியில் கலந்துகொண்டு அன்னையின் ஆசீர்பெற்றனர்… பூண்டி புதுமை மாதாவின் அன்பு பக்தர்கள் அனைவருக்கும் அன்னையின் பிறப்பு பெருவிழா வாழ்த்துக்கள்..

பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா ஒன்பதாம் நாள் நவநாள்
பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா ஒன்பதாம் நாள் நவநாள், மரியன்னையின் செபிக்கும் கரங்கள் என்ற கருத்தை மையமாக கொண்டு அருட்பணி மைக்கில்ராஜ்,பேராசிரியர்,புனித பவுல் குருத்துவக் கல்லூரி,திருச்சி,அவர்களால் சிறப்பு கூட்டுபாடற் திருப்பலி நிறைவேற்றப்பட்டது …திருப்பயணிகளும்,பங்கு மக்களும் திருப்பலியில் கலந்துகொண்டு அன்னையின் ஆசீர்பெற்றனர்… அன்னையின் பிறப்புப் பெருவிழாவை சிறப்பிக்க அனைவரும் பூண்டி புதுமை மாதாவை நோக்கி புறப்படுவோம்.

பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா எட்டாம் நாள் நவநாள்
பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா எட்டாம் நாள் நவநாள், மரியா நமக்காக வழக்காடுபவர் என்ற கருத்தை மையமாக கொண்டு அருட்பணி,ஜான் பீட்டர் , புனித அருளானந்தர் பேராலயம்,திருச்சி அவர்களால் சிறப்பு கூட்டுபாடற் திருப்பலி நிறைவேற்றப்பட்டது .. பூண்டி புதுமை மாதாவின் அன்பு பிள்ளைகள்,மற்றும். பங்கு மக்கள் திருப்பலியில் கலந்துகொண்டு அன்னையின் ஆசீர்பெற்றனர்… அனைவரும் வாருங்கள் அன்னையின் ஆசீர் பெற்றுச்செல்ல…..



