• independance-day-poondi-madha-basilic

    77 வது சுதந்திர தின நாள்

    இன்று 77 வது சுதந்திர தின நாள் நம் பூண்டி மாதா பேராலயத்தில் கொண்டாடப்பட்டது. நம் பேராலயத்தின் அதிபர் & பங்குத்தந்தை. பேரருள் பணி. சாம்சன் தேசியக்கொடியேற்றினார். அன்னை மரியாளின் விண்ணேற்பு பெருவிழா திருப்பலியில் ஏராளமான இறைமக்கள் பங்கு பெற்று இறையாசீர் பெற்றனர்.

  • poondi madha

    புதிய ஆராதனை ஆலயம் மற்றும் திருப்பலி திருப்பீடப் பொருட்கள் வைக்கும் அறை மற்றும் தியான பீடம் கட்டிடப் பணி

    பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதாவின் அன்புப் பிள்ளைகளே!நமது நீண்ட கால வேண்டுகோளுக்கு ஏற்ப, புதிய ஆராதனை ஆலயம் மற்றும் திருப்பலி திருப்பீடப் பொருட்கள் வைக்கும் அறை மற்றும் தியான பீடம் கட்டிடப் பணியானது இனிதே தொடங்கப்பட்டுள்ளது; என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தங்களது இடைவிடாத ஜெபத்தையும் உடனிருப்பையும் தாராளமனதுடன் அளித்திட கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம். மரியே வாழ்க! Dear Beloved Children of Miraculous Mother of Poondi!A much...

  • ஆண்டு திருவிழா

    15.05.2023 அன்று பேராலய அதிபர் பேரருட்திரு. P.J. சாம்சன் அடிகளார் வேண்டுதல் சப்பிரத்தினை புனிதம் செய்து அன்னையின் கொடியினை இறக்கி நமது பேராலய பங்கு ஆண்டு திருவிழாவினை நிறைவு செய்து, அன்னையின் ஆசிரை வழங்கினார்கள். Very Rev Fr P.J. Samson, the Rector of our Basilica has concluded the Parochial feast of our Mother of Poondi on 15. 05.2023 by lowering...

  • புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி

    பூண்டி புதுமை மாதா திருத்தல பேராலயத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலியினை திருத்தல அதிபர் பேரருட்திரு. சாம்சன் அடிகளார் தலைமையேற்று நிகழ்த்தினார். பேராலய உறுப்பினர்களின் கருத்துகளுக்காக திருப்பலியானது சிறப்பாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • கிறிஸ்து பிறப்பு பெருவிழா

    பூண்டி புதுமை மாதா பேராலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலியில் ஏராளமான அன்னையின் பக்தர்கள் பங்குபெற்று சிறப்பித்தனர். திருப்பலியினை பேராலய அதிபர் பேரருள்திரு. சாம்சன் அடிகளார் தலைமையேற்று நடத்தினார்.

  • fr.lourdu xavier

    இறையடியார் V. S. லூர்து சேவியர் அடிகளாரின் பரிந்துரையை நாடி

    இன்று காலை 8.30 மணிக்கு நிறைவேற்றப்பட்ட திருப்பலிக்கு பிறகு இறையடியார் V. S. லூர்து சேவியர் அடிகளாரின் பரிந்துரையை நாடி அவரது கல்லறையில் பேராலய அதிபர் பேரருட்திரு. சாம்சன் அடிகளார் வழிநடத்தி செபித்தார்கள். அதனை தொடர்ந்து பேராலய ஆன்ம குரு அருள்பணி. அருளானந்தம் அவர்கள் அருள்பணி. இராயப்பர் அடிகளாரின் கல்லறையை அர்ச்சித்து செபித்திட்டார்கள்.

  • செபமாலை மாதம்

    செபமாலை மாதத்தை நிறைவு செய்யும் வகையில் இன்றைய நாளில் சிறப்பு செபமாலையும், திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. இந்த மாதம் முழுவதும் செபமாலையில் பங்கேற்ற 18 குழந்தைகளுக்கு பேராலய அதிபர் பேரருட்திரு. சாம்சன் அடிகளார் பரிசு வழங்கினார்கள். இந்த மாதம் முழுவதும் செபமாலையினை ஒருங்கிணைத்த மரியாயின் சேனையினருக்கும், அருள்சகோதரிகள் மற்றும் பங்கு மக்களுக்கு எமது நன்றிகளும், செபங்களும். மரியே வாழ்க!